ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - துலாம்

விடாமுயற்சியும், விவேகமும் கொண்டிருக்கும் துலாம் ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம், உங்களின் ராசிக்கு விரையஸ்தானத்தில் கேதுவும், ஆறாமிடத்தில் ராகுவும் அமர்வது நற்பலனை பெற்றுத் தரும். உங்களின் வாழ்க்கையில் பல லட்சிய கனவுகளை கடந்து வந்தீர்கள்.
 
இனி அதில் சிம்ம சொப்பனமாக திகழும் காலமாக உங்களுக்கு அமையும். கடந்த காலத்தில் இருந்த பல கஷ்டங்கள் விலகி, உங்களின் தீராத கடன் தீர்ந்து, நல்லவை கிடைக்க வழிபிறக்கும். பாதியில் நின்ற காரியங்கள் செயல்பட துவங்கும்.
 
முதலீடு இல்லாத கமிசன் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். பாத எரிச்சல் சம்மந்தமாக உடல் உபாதை உண்டாகும் என்பதால் உடல் நலனின் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் முழு கவனம் தேவை. 
 
பன்னிரெண்டில் கேது அமரும் போது வெளிநாட்டு வேலை, பொன், பொருள் சேர்க்கை, வெளிநாட்டு கூட்டு தொழில் வாய்ய்புகள் சிலருக்கு அமையும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் நன்மைகள் உண்டாகும்.
 
உங்களின் ராசியை குரு பார்க்கும் காலம் வரையில் எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலில் சிலருக்கு புதிய அனுபவமும், சிறு பதவிகளும் கிடைக்கும். 
 
முதியவர்கள் தங்கள் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டி வரும். மளிகை கடை, சமையல் பொருட்களின் விற்பனை மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலை துறையினருக்கு சில வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க பெறுவீர்கள். எதையும் பொறுமையுடன் செய்வீர்கள். பெண்கள் முக்கியத்துவம் உள்ள பணிகளைச் செய்து பாராட்டைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
 
பரிகாரம்:
 
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமிட்டு வழிபபாடு செய்து வர, உங்களின் சகல விதமான காரியமும் வெற்றியை தரும்.